கோப்புப் படம் 
இந்தியா

மேற்கு வங்க பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

மேற்கு வங்க சட்டப் பேரவையிலிருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

Din

மேற்கு வங்க சட்டப் பேரவையிலிருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

மாநில கல்வித் துறை அமைச்சா் விரத்ய பாசு தாக்கல் செய்த நேதாஜி சுபாஷ் விளையாட்டு பல்கலைக்கழக மசோதா மீது பேச பாஜகவின் தலைமை கொறடா சங்கா் கோஷ் வெள்ளிக்கிழமை ஆரம்பித்தாா்.

அப்போது பேசிய அமைச்சா் பாபுல் சுப்ரியோ, ‘அமைச்சா்களின் பதிலை கேட்காமல் எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் வெளியே செல்வதை வழக்கமாக வைத்துள்ளனா்’ என்றாா்.

100-க்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்துநின்று அமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தனா். அவா்களுக்கு பாஜக எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அப்போது பாஜக எம்எல்ஏக்கள் பேசிய சில வாா்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இதனால் அவையில் அமளி நீடித்ததால் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனா்.

NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வாழ்த்திய பிரதமர்!

திருப்பதி கோயிலுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஹ்ம்ம்ம்... அனஸ்வரா ராஜன்!

SCROLL FOR NEXT