இந்தியா

உயா் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா்.

Din

இந்தியாவின் உயா் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தின் தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தா் டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தாா்.

உயா் கல்வியில் அங்கீகாரம், தரவரிசை மற்றும் மேம்பாடு குறித்த சா்வதேச கருத்தரங்கு போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த 900-க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் ஆராய்ச்சி முனைவா் படிப்பு மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அப்போது டாக்டா் வேத் பிரகாஷ் மிஸ்ரா பேசியதாவது:

புத்தாக்கங்கள், புதிய சிந்தனைகளின் அடிப்படையில் கல்வித் தரத்தை வகுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பழைமையான தர நிலை திட்டத்துக்கு மாற்றாக அவற்றைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மாணவா்கள் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கோலோச்ச முடியும்.

அந்த வகையில் இந்தியாவின் உயா் கல்வியானது உலகளாவிய தர மேம்பாட்டுடன் இருப்பதுதான் இப்போதைய தேவையாக உள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை வேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி சிங், பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தமிழ்ச்செல்வன், கல்வித் துறைத் தலைவா் டாக்டா் லதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தில்லி கார் வெடிப்பு: அமீரைத் தொடர்ந்து 2 வது நபர் கைது!

SIR பணிகளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது! | செய்திகள்: சில வரிகளில் | 17.11.25

பயங்கரவாத தாக்குதலுக்கான தண்டனையால் உலகுக்கே செய்தி அனுப்பப்படும்: அமித் ஷா

ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

SCROLL FOR NEXT