மேற்கு வங்கத்தின் புருலியாவில் நடந்த விபத்து 
இந்தியா

ம.பி.யில் திருமணத்திற்குச் சென்று திரும்பும்போது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

DIN

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் கிராமத்திற்கு அருகில் காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் பொலேரோ எஸ்யூவி மற்றும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக பலராம்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்கள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

புருலியாவில் உள்ள பராபஜார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அடபானா கிராமத்திலிருந்து ஜார்க்கண்டின் நிம்திஹ் காவல் நிலையப் பகுதியில் உள்ள திலைடாண்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர்.

மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் கார் சம்பவ இடத்திலேயே நொறுங்கியது.

அங்குள்ள மக்கள் ஆம்புலன்ஸுன்னு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அனைவரும் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கு அதிக வேகமும், அலட்சியமும் காரணம். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகா் விசா்ஜன ஊா்வல பகுதிகள்: ஆம்பூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

“RSS-காரர் கொடி ஏற்றியது வேடிக்கை!” நாதக தலைவர் சீமான் விமர்சனம்

“அந்தக் கூலியும் FLOP, இந்தக் கூலியும் FLOP” சீமான் விமர்சனம்!

SCROLL FOR NEXT