சோனம்(கோப்புப்படம்)  
இந்தியா

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் திருமணமாகி 10 நாள்களில் மேகாலயாவுக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

அப்போது, சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையுடன் இணைந்து ராஜா ரகுவன்ஷியை கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டது. ராஜ் குஷ்வாஹாவின் ஏற்பாட்டில், மேகாலயாவுக்குச் சென்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துள்ளனர். சம்பவத்தின்போது சோனமும் உடன் இருந்துள்ளார்.

சோனம் ரகுவன்ஷியை உத்தர பிரதேசத்திலும் அவரது காதலர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களை மத்திய பிரதேசத்திலும் மேகாலயா போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான மனைவி சோனம் மற்றும் அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவுக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதித்து ஷில்லாங்கில் உள்ள நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இரண்டு நாள்களுக்கு முன்பு, கொலையாளிகள் என்று கூறப்படும் ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சௌகான் மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய மூவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் இருந்து நேபாள நாட்டினர் மீட்பு: இந்தியாவுக்கு நேபாள அரசு நன்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“எங்கள் வாக்கு! எங்கள் உரிமை!” SIR-க்கு எதிராக தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி..! பணிச்சுமை காரணமா?

புயல் சின்னம்: சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

பிகார் முதல்வர் பதவியேற்பு விழா! தேஜ கூட்டணி முதல்வர்களுடன் விமரிசையாக நடத்த திட்டம்!

SCROLL FOR NEXT