ஜியோ திட்டம் 
இந்தியா

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! அதாவது 11 மாதத்துக்கு ரூ.895 செலுத்த வேண்டும்

DIN

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அறிமுகப்படுத்தியிருக்கும் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டம் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அளவில்லா அழைப்பு மற்றும் 24 ஜிபி டேட்டா வசதியுடன் 11 மாதத்துக்கு ரூ.895 ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தற்போதிருக்கும் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 28 நாள்களுக்கு வெறும் 80 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் அளவுக்குத்தான் வருகிறது.

ஆனால், இந்த திட்டம் ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன் வைத்திருப்பவர்களுக்குத்தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒருவேளை எதிர்காலத்தில் போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த ஜியோ ஃபீச்சர் போன்களை வாங்கி, இந்த ரீசார்ஜ் வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்கு பெரிய பரிசு காத்திருக்கிறது! பிரதமர் மோடி

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது! பிரதமர் மோடி

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இன்று உங்க ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT