விசாகப்பட்டினத்தில் நாரா லோகேஷ் - மோடி படம்| நாரா லோகேஷ் பதிவு
இந்தியா

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!

அமைச்சர் நாரா லோகேஷ் பற்றி பிரதமர் மோடி...

DIN

யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.

சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்திலுள்ள் விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கின்னஸ் உள்பட பல்வேறு உலக சாதனைகளைப் படைக்கும் என்று மாநில முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷைப் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது: “யோகா நாளை சமூகத் திருவிழாவாக மாற்றி நடத்தியதற்காக நாரா லோகேஷ், சுமார் ஒன்றரை மாதமாக கடுமையாக உழைத்தார். அவரது முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து சமூகத் திருவிழாவாக யோகா நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிக்கான அவரது திட்டமிடலும் செயல்பாடும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைத்து நடத்திட நாடு முழுவதும் இதே பாணியில் செயல்படலாம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT