இந்தியா

சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும்: அமித் ஷா

சிந்து நதிநீரை கால்வாய் வழியாக ராஜஸ்தானுக்கு திருப்பி விடுவோம்: அமித் ஷா

DIN

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை ராஜஸ்தானுக்கு திருப்ப புதிய கால்வாய் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நெடுங்காலமாக உடன்பாட்டிலிருந்து வந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதனால் இந்திய எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்கு பாயும் பெருமளவு நதிநீர் தடைபட்டுள்ளது.

இந்தநிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தற்காலிகமான நடவடிக்கையா அல்லது நிரந்தரமானதா என்று அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது: “சிந்து நதிநீர் இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படாது. பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை கால்வாய் கட்டி ராஜஸ்தானுக்கு திருப்பி விடுவோம். இதனால் தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT