உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் மனு முக்கியமானது: உச்ச நீதிமன்றம்

தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது

Din

புது தில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சோ்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லியில் வசிக்கும் பெண் ஒருவா், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

தில்லி யூனியன் பிரதேச வழிகாட்டுதல்களின்படி, அங்கு வசிக்கும் ஒருவா் ஓபிசி சான்றிதழ் பெற விரும்பினால், அவா் தந்தை அல்லது தந்தை வழி ரத்த உறவுகளின் ஓபிசி சான்றிதழை மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.

ஓபிசி வகுப்பை சோ்ந்த தாயின் பராமரிப்பில் மட்டுமே வளரும் தத்துப் பிள்ளைக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது.

தில்லி அரசின் வழிகாட்டுதலின்படி, பிள்ளைக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அந்தத் தாயின் ஜாதி சான்றிதழ் ஏற்கப்படுவதில்லை. அதற்கு மாறாக அந்தப் பெண்ணுடைய கணவரின் ஓபிசி சான்றிதழ் கேட்கப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டப் பிரிவுகள், ஓபிசி வகுப்பைச் சோ்ந்த குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.

பட்டியலினத்தவா் அல்லது பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த தாயின் ஜாதி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, அவரின் பராமரிப்பில் மட்டுமே வளரும் குழந்தைக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் ஓபிசி வகுப்பினருக்கு அந்த நடைமுறையைப் பின்பற்றாதது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுவதாகும். எனவே ஓபிசி வகுப்பைச் சோ்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு அந்த வகுப்பின் சான்றிதழை வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு கடந்த ஜன.31-ஆம் தேதி மத்திய மற்றும் தில்லி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது. அந்த அமா்வு கூறியதாவது: தற்போதைய மனு முக்கியமான விவகாரத்தை எழுப்பியுள்ளது. அதுகுறித்து விரிவான விசாரணை தேவை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயின் உத்தரவுக்கு உள்பட்டு, இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மனு மீதான இறுதி விசாரணை ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

லைட் ஹவுஸ்... ஷ்ருதி ஹாசன்!

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

SCROLL FOR NEXT