வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேமரூன் நாட்டு மக்களுக்கு இந்தியா சார்பில் 1,000 மெட்ரிக் டன் அரசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. PTI
இந்தியா

கேமரூனுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா! மீண்டும் 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைப்பு!

கேமரூன் மக்களுக்கு 1000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், இந்தியா சார்பில் 1000 மெட்ரிக் டன் அரிசி மற்றும் மருத்துவப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேமரூன் நாட்டின் வடக்கு மாகாணங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்குத் தேவையான சுமார் 1000 மெட்ரிக் டன் அரசி மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை, கேமரூன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் விஜய் கந்துஜா, அந்நாட்டு பிராந்திய நிர்வாக அமைச்சர் பால் அடாங்கா இன்ஞியிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து, விஜய் கந்துஜா வெளியிட்ட முகநூல் பதிவில், அவசரகாலத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான நட்பின் அடிப்படையில், இந்த மனிதாபிமான உதவியானது மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூன் நாட்டுக்கு இந்திய அரசு சார்பில் 1000 மெட்ரிக் டன் அளவிலான அரிசி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உணவுக்காகக் காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT