நிலச்சரிவினால் தேசிய நெடுஞ்சாலையில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்
இந்தியா

கனமழையால் நிலச்சரிவு! 2 மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கம்! எங்கே?

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் சிக்கிம் - மேற்கு வங்கம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டுள்ளது.

DIN

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இருமாநிலங்களையும் இணைக்கும் 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தின் செவோகே மற்றும் சிக்கிமின் ராங்போ ஆகிய இருநகரங்களையும் இணைக்கக் கூடிய 52 கி.மீ. நீளமான 10-வது தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் கலிம்போங் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் அந்த நெடுஞ்சாலையின் கலி ஜோரா, சேதி ஜோரா, செல்ஃபி தாரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாதையை முடக்கியுள்ள பாறைகள் உள்ளிட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சாலையை முடக்கியுள்ள பாறைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்துக்கு வழியில்லாத நிலை உருவாகியுள்ளதால், கலிம்போங் மாவட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டு போக்குவரத்தை சீர்செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: உத்தரகண்ட் நிலச்சரிவில் 2 பேர் பலி! 2வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT