சுபான்ஷு சுக்லா கோப்புப்படம்
இந்தியா

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்லும் சுபான்ஷு சுக்லாவிற்கு மோடி வாழ்த்து..

DIN

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ராக்கெட் இன்று 12.01 மணியளவில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்குப் புறப்பட்டது. இது 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையமான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையவுள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று 14 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றது.

இதுதொடர்பாக மோடியின் எக்ஸ் பதிவில்,

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை நாங்கள் வரவேற்கிறோம்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அடைய உள்ளார். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை அவர் தன்னுடன் சுமந்து செல்கிறார்.

சுபான்ஷு சுக்லாவுக்கும், அவருடன் செல்லும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT