கோப்புப் படம் 
இந்தியா

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

Din

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 2 ஆயிரத்து 338 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு:

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டில் 2,338 கிராம ஊராட்சிகளில்

நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 9 லட்சத்து 36 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவா் எனவும், இதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதிக்கு நிா்வாக ஒப்புதலை தமிழக அரசு அளித்துள்ளது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT