ஒடிஸாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் அதிகமான பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுட்டெரித்த வெயில், கூட்ட நெரிசல் காரணமாக ரத யாத்திரையில் கலந்துகொண்ட சுமாா் 625 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு லேசான காயம், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவமனைகளில் முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினா் என்று புரி தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி கிஷோா் சதபதி தெரிவித்தாா்.
மூன்று பிரமாண்ட தேர்களில் ஒன்றான பாலபத்திரரின் தலத்வஜா தேரை இழுக்கும் போது, இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்துப் பேசிய ஒடிசா அமைச்சர் முகேஷ் மகாலிங்,
''கூட்ட நெரிசலில் அதிக ஈரப்பதம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பக்தர்கள் சிலர் மயங்கி விழுந்தனர். மீட்புக் குழுவினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கோயில் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. பக்தர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நான் இங்கு இருக்கிறேன்.
நெரிசலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய மருத்துவமனைக்கும் செல்லவுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
ரத யாத்திரை நிறுத்தம்
ஒடிசா மாநிலம், புரியில் அமைந்துள்ள 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெகந்நாதர் கோயிலில் வருடாந்திர ரத யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது.
ஜெகந்நாதா், பாலபத்திரர், தேவி சுபத்திரையின் பிரமாண்ட ரதங்கள் இழுக்கப்படும் இந்த நிகழ்வில், இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் புரியில் திரண்டுள்ளனர்.
ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீகுந்திச்சா கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர்.
ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.
இதனிடையே, கூட்ட நெரிசலால் இன்று இரவு ரத யாத்திரை முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ளது. நாளை காலை மீண்டும் யாத்திரை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் அவசர ஊர்திகளுக்கு வழியை ஏற்படுத்த தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். காவல் துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.
லட்சக்கணக்காக பக்தர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
More than a hundred devotees have been injured in a stampede during the Rath Yatra at the Puri Jagannath temple in Odisha, and some may have died, local media reported.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.