புரி ரத யாத்திரையில் அதானி  PTI
இந்தியா

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

புரி ரத யாத்திரையில் அதானியுடன் குடும்பத்தார்...

DIN

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்கு ரதங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு 9 நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு ரதங்கள் மீண்டும் ஜெகந்நாதா் ஆலயத்துக்குத் திரும்பும்.

இவ்விழாவில் இந்தியாவின் பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான கௌதம் அதானி தமது குடும்பத்துடன் இன்று(ஜூன் 28) கலந்துகொண்டார். அவர் அங்குள்ள பக்தர்களுக்காக சமையல் செய்தும் உபசரித்தார்.

அவருடன் அவரது மனைவி ப்ரீத்தி, மகன் கரன் ஆஜியோருக் வருகை டஹ்ந்திருந்தனர். பக்தர்களுக்காக தயார் செய்யப்படும் அன்னதானக் கூடத்தில் அதானி எண்ணெய்ச் சட்டியில் பூரி பொரித்ததும் சாதம் சமைத்ததும் அங்கு திரண்டிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. இந்த படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.

அன்னதானக் கூடத்தில் அதானி

ரத யாத்திரையையொட்டி முக்கிய விஐபிக்கள் பலர் கலந்துகொள்வதால், மத்திய ஆயுதக் காவல் படையினா், காவல் துறையினா், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் பிப்ரவரி மாத ஒதுக்கீடு வெளியீடு!

அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு: பெண் கைது!

SCROLL FOR NEXT