சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துரையாடினார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் கூறியிருப்பதாவது, குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன். சர்வதேச விண்வெளி ஆய்வு மைய அனுபவங்களை சுபான்ஷு சுக்லா பகிர்ந்துகொண்டார்.
நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அடைந்தார்.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா்.
மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அங்கிருந்து பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் கலந்துரையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The PM Narendra Modi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.