X | Randhir Jaiswal
இந்தியா

தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்சகம் கண்டனம்!

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

DIN

பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் கிளைப்பிரிவான ஹஃபிஸ் குல் பஹதூர் எனும் ஆயுதப் படையின் தற்கொலைப் படைப் பிரிவு பொறுப்பேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்ததோடு, கண்டனமும் வெளிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், இன்று (ஜூன் 28) வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலைப் படையின் பயங்கரவாதி ஒருவர், ராணுவ பேரணியில் மோதி குண்டுகளை வெடிக்கச் செயததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 10 வீரர்கள், 6 குழந்தைகள் உள்பட 29 பேர் காயமடைந்த நிலையில், 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப்பின் 25% வரி விதிப்பால் என்னென்ன துறைகளுக்கு அதிக பாதிப்பு?

“Modi-க்கு ஒரு நன்றி சொல்லுங்க!” வானதி சீனிவாசன் வெளியிட்ட விடியோ! | GST | BJP

எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!

ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

ரிஷப் பந்த்தை துரத்தும் காயம்..! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடுவாரா?!

SCROLL FOR NEXT