ஐஆர்சிடிசி file photo
இந்தியா

மறந்துடாதீங்க... நாளைமுதல் ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்!

நாளைமுதல் ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்..

DIN

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை நாளைமுதல் (ஜூலை 1) அமலுக்கு வருகின்றது.

இந்த நிலையில், ஐஆர்சிடி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனர்கள், உடனடியாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகள் தடுக்கும் நோக்கில், விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நடைமுறை நாளைமுதல் அமலுக்கு வருகின்றது. ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆதார் சரிபார்ப்பு (aadhaar verification) செய்யப்பட்டவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

மேலும், ரயில்வே கவுன்டர்களில் நேரடியாகச் சென்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூலை 15 முதல் ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு (Aadhaar-based OTP authentication) கட்டாயமாக்கப்படவுள்ளது.

இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு, ரயிலில் பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்ட பின்னரே கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

The Indian Railways has made Aadhaar number mandatory for Tatkal ticket bookings, effective from tomorrow (July 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேர்காணலால் வைரலான மராத்திய நடிகை..! மார்பிங் படங்களால் வேதனை!

கதவோரக் கவிதை... அம்மு அபிராமி!

பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்: இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

ஜீன்ஸ்... ஜீன்ஸ்... சோபிதா துலிபாலா!

வெளிச்சப் பூவே... ஸ்ரீதேவி அசோக்!

SCROLL FOR NEXT