தெலங்கானா மாநிலம், மடக் மாவட்டத்தில் உள்ள பஷ்யல்ராம் பகுதியில் மருந்து தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் தாமோதர ராஜ நரசிம்ம உறுதிப்படுத்தினார்.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கூறுகையில்,
சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்தனர்.
வெடி விபத்து ஏற்பட்ட சமயத்தில் தொழிற்சாலையில் சுமார் 150 பேர் பணியில் இருந்ததாகவும், அதில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவதால் தொழிலாளர்கள் சிலர் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக தீப்பிழம்புகள் தொழிற்சாலையின் சில பகுதிகளை சூழ்ந்தன. ஆலை முழுவதும் கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
summary
12 people are feared dead and twenty others injured after a reactor explosion at a chemical plant in the Pasamailaram industrial area of Patancheru, Sangareddy district, on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.