மீட்புப்பணியில் ராணுவத்தினர்.  
இந்தியா

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் ஒரு உடல் மீட்பு, பலி 5 ஆனது!

உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

DIN

உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதன் மூலம் பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன எஞ்சிய 3 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மீட்கப்பட்ட உடல் டெஹ்ராடூன் கொண்டு செல்லப்படுகிறது.

ராணுவம், விமானப்படை, என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப் உள்ளிட்ட பல படைகள் இணைந்து காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டறிய தரையில் ஊடுருவக்கூடிய ரேடார், தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறியும் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அப்பகுதியில் வானிலை மேம்பட்டு வருவதாகவும், ஆனால் பனிச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, மனா மற்றும் பத்ரிநாத் இடையே அமைந்துள்ள பிஆா்ஓ முகாம் பனிச்சரிவில் புதைந்தது.

இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் தங்கியபடி, சாலையில் படியும் பனியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவந்த 55 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை பனிச்சரிவில் சிக்கினா்.

இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

கடும் பனிப்பொழிவு, கனமழைக்கு இடையே பகல் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் 33 போ் காயங்களுடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். மோசமான வானிலை மற்றும் இருள் சூழ்ந்ததால் வெள்ளிக்கிழமை இரவில் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னா், சனிக்கிழமை அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

போலி நிறுவனம் தொடங்கி ரூ.206 கோடி மோசடி: ஒடிசாவை சோ்ந்த இருவா் கைது

நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பாட விருப்பங்களை செப்.1-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

SCROLL FOR NEXT