போதைப் பொருள்கள் பறிமுதல் கோப்புப் படம்
இந்தியா

மிசோரம்: ரூ. 66 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

பாதுகாப்புப் படையினரால் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

மிசோரம் மாநிலத்தில் ரூ. 66 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மியான்மருடன் இந்திய எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிசோரத்தின் சம்பய் மாவட்டம் போதைப் பொருள்கள் கடத்தல் அதிகம் நடக்கும் பகுதியாகும். இங்கு, அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கடந்த சனியன்று (மார்ச். 1) சோகாவ்தார் பகுதியில் ரூ. 60.62 கோடி மதிப்பிலான 20.20 கி அளவுள்ள மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவல்களின்படி சோதனை நடத்தப்பட்ட நிலையில் இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அடுத்ததாக அந்தப் பகுதிக்கு அருகிலேயே ரூ. 6 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றபோது பிடிபட்டனர். பாதுகபபுப் படையினரைப் பார்த்ததும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

பிடிபட்ட போதைப் பொருள்கள் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் இருந்து கடத்தப்படும் போதைப் பொருள்கள் பெரும்பாலும் வங்கதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் மிசோரம், அஸ்ஸாம் வழியாக திரிபுராவிற்கு வருகின்றன.

இந்தியா - வங்கதேசத்தின் குறிப்பிடத்தக்க எல்லைப் பகுதிகள் வேலியிடப்பட்டிருந்தாலும் மியான்மருடனான எல்லைப் பகுதிகள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே உள்ளது சட்டவிரோத கடத்தல்களுக்கு உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT