மரண தண்டனை 
இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தகவல்.

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

தனது மகள் ஷாஹ்சாதி கானுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து மீட்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த தகவலை தெரிவித்தார். உ.பி. பெண்ணைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், இருப்பினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், அப்பெண்ணின் இறுதிச் சடங்குகள் மார்ச் 5ஆம் தேதி நடத்தப்படுவதாகவும், அவரது குடும்பத்துக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

தனது மகளின் நிலை குறித்து தெரியாததால், ஷாஹ்சாதி கான் தந்தை ஷப்பீர், தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். தனது மகளுக்கு மத்திய வெளியுறவு விவகாரத்துறை உதவி செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த நிலையில்தான், 15 நாள்களுக்கு முன்பே, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஷாஹ்சாதி கான் மீது, துபையில் வாழ்ந்து வரும் பையஸ் - நஸியா தம்பதியின் நான்கரை மாதக் குழந்தையைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவைச் சோ்ந்த நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் வெளிநாட்டு நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் எண்ணிக்கை குறித்தும் மத்திய அரசிடம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இக்கேள்விக்கு மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘வெளிநாடுகளில் 54 இந்தியா்கள், அந்நாட்டு நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளனனா். குறிப்பாக, அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்தில் 29 இந்தியா்கள், சவுதி அரேபியாவில் 12 போ், குவைத்தில் 3 போ், கத்தாரில் ஒருவா் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ளனா் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT