கோப்புப் படம் 
இந்தியா

சிங்கப்பூர்: போதைப் பொருள் பயன்படுத்திய இந்தியருக்கு 2 ஆண்டு சிறை!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் 22 மாதங்கள் சிறையுடன், ரூ. 12.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

DIN

சிங்கப்பூரில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் இந்தியருக்கு சுமார் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நிரந்தரமாகக் குடியேறிய சாஜன் ஓபராய் (35) மீது 15 வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், 5 குற்றச்சாட்டுகளுக்கு உண்மையை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஒரு வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு 18,500 சிங்கப்பூர் டாலர் (ரூ. 12.1 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

போதைப் பொருள் பயன்படுத்தியது, வணிக வளாகத்திலிருந்து மதுப் புட்டிகளைத் திருடியது, உணவு விடுதியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட புகார்களில் சாஜன் கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT