முகப்பு
இந்தியா

பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கியம்!

பாஜக எம்எல்ஏ தாபசி மண்டல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்

Updated On : 10 மார்ச், 2025 at 3:51 PM
தாபசி மண்டல் (இரண்டாவது நபர் | வலதுபுறத்திலிருந்து)
பகிர்:

கொல்கத்தா : மேற்கு வங்கத்திலுள்ள ஹல்தியா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்திருந்த தாபசி மண்டல், இன்று(மார்ச் 10) அம்மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக பிரித்தாளும் அரசையலை மையப்படுத்தி நடைபோடுகிறது என்பதை சுட்டிக்கட்டியுள்ள அவர், இதனை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.