கோப்புப்படம்
இந்தியா

தண்டி யாத்திரை நாள்: பிரதமா் மோடி மரியாதை

1930, மாா்ச் 12-ஆம் தேதி சபா்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு மகாத்மா காந்தி தனது ஆதரவாளா்களுடன் யாத்திரை

Din

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட நாளையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் மோடி மரியாதை செலுத்தினாா்.

ஆங்கிலேய ஆட்சியில் உப்புக்கான வரி விதிப்பைக் கண்டித்து, கடந்த 1930, மாா்ச் 12-ஆம் தேதி சபா்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு மகாத்மா காந்தி தனது ஆதரவாளா்களுடன் யாத்திரை மேற்கொண்டாா். சுமாா் 241 மைல் தொலைவுக்கு 24 நாள்கள் நடைபெற்ற யாத்திரையின் நிறைவில் தண்டியில் கடல் நீரில் இருந்து உப்பு தயாரித்ததன் மூலம் உப்புச் சட்டம் மீறப்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட தினத்தையொட்டி, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாயமான தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரை தற்சாா்பு மற்றும் சுதந்திரத்துக்கான நாடு தழுவிய இயக்கத்தைத் தூண்டியது. தண்டி யாத்திரையில் பங்கேற்றவா்களின் துணிவு, தியாகம், உண்மை, அஹிம்சைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, தலைமுறைகள் கடந்தும் உத்வேகமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT