இந்தியா

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை ...

DIN

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலகளாவிய ஸ்மார்ட்போன் மையமாக இந்தியா மாறியுள்ளது. ​​நாட்டில் விற்பனையாகும் 99.2% ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

2025 நிதியாண்டின் 11 மாதங்களில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியாக உயர்ந்து, உலகளவில் தயாரிப்புத் துறையில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி 0.2 பில்லியன் டாலர்களாகவே இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், 21 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலேயே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் விகிதம் 2014 - 2015-ல் 26% ஆக இருந்தது. ஆனால், 2024 - 2025ல் 99.2% ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-ல் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக இரு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT