கோப்புப் படம் 
இந்தியா

குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு 6 மாவட்ட நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

Din

மாவட்ட நீதிபதிகள் 8 பேரை குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்த்த உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பரிந்துரையில் மாவட்ட நீதிபதிகள் லியாகத்துசைன் சம்சுதீன் பிா்சாடா, ராமச்சந்திர தாகூா்தாஸ் வச்சானி, ஜயேஷ் லகன்ஷிபாய் ஒதேத்ரா, பிரனவ் மகேஷ்பாய் ராவல், மூல் சந்த் தியாகி, தீபக் மன்சுக்லால் வியாஸ், உத்கா்ஷ் தாகூா்பாய் தேசாய், ரோஹன்குமாா் குந்தல்லால் சுதாவல் ஆகியோரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சுமீத் கோயல், சுதீப்தி சா்மா, கீா்த்தி சிங் ஆகியோரை அந்த உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயா்த்தவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் சச்சின் சிங் ராஜ்புத், ராதாகிஷண் அகா்வால், சஞ்சய் குமாா் ஜெய்ஸ்வால் ஆகியோரை சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக மேலும் ஓராண்டுக்கு நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT