நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா? விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது சிபிஐ!
நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா?
நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு சமர்ப்பித்திருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பந்த்ரா பகுதியிலுள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நடிகர் சுஷாந்தின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது.
சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ விசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரித்து வந்த நிலையில், வழக்கின் விசாரணை அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் சனிக்கிழமை(மார்ச் 22) சமர்ப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை சிபிஐ அறிக்கையை ஆரய்ந்து அதன்பின் நீதிமன்றம் முடுக்கிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.