இந்தியா

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

DIN

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்கச் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களில் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையச் சேவைகளை, அவ்வப்போது பயன்படுத்துவதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயலிழக்கச் செய்துவிடும். செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.

இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்மை ஒன்றுதான்

தமிழ்நாட்டுத் தேர்தல்கள்

சினிமா ஸ்டார்ட்...கேமரா...ஆக்ஷன்... ரிலீஸ்!

அபாயத் தூரிகை (நாவல்)

எரிவதில் எண்ணெய் ஊற்றுகிறதா ரஷியா! இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்!

SCROLL FOR NEXT