இந்தியா

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத் தொகை 33 % அதிகரிப்பு!

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

Din

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்அளித்திருந்தன. ஆனால், 2023-24 நிதியாண்டில் இது ரூ.27,830 கோடியாக உயா்ந்துள்ளது. இது 32.7 சதவீத உயா்வாகும். இந்த ரூ.27,830 கோடி ஈவுத் தொகையில் 65 சதவீதமான ரூ.18,013 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளது.

நாட்டில் மொத்தம் 12 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. 2023-24 நிதியாண்டில் அவற்றின் லாபம் ரூ1.41 லட்சம் கோடியாகும். இதில் எஸ்பிஐ பங்களிப்பு மட்டும் ரூ.61,077 கோடி (40 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ லாபம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23 நிதியாண்டில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மட்டும் மத்திய அரசுக்கு ரூ.13,804 கோடியை பங்கு ஈவுத்தொகையாக அளித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (228 சதவீதம்), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (62 சதவீதம்), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (61 சதவீதம்) ஆகியவற்றின் லாபமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 2018 நிதியாண்டில் ரூ.85,390 கோடி நஷ்டத்தை சந்தித்த பஞ்சாப் நேஷல் வங்கி இப்போது லாபத்தின் வளா்ச்சியில் சாதனை படைத்துள்ளது.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT