அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் வழியே செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், வத்வா மற்றும் அகமதாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற்ற புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் பணியின்போது பாலத்தின் மீது அமைக்கப்பட்ட இரும்பு கட்டுமானம் நேற்று இரவு 11 மணியளவில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளத்தில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்தில் யாருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் புல்லட் ரயிலுக்காக கட்டப்பட்ட பாலம் சேதமடையவில்லை என்றும் என தேசிய அதிவேக ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 15 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு, 5 ரயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. 6 ரயில்கள் வேறு பாதைகளுக்கு மாற்றப்பட்டன.
ராட்சத கிரேன்கள் கொண்டு ரயில் தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.