கோப்புப்படம் Din
இந்தியா

ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு: தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளா் உள்பட 4 போ் கைது

ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளா், தனியாா் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளா்

Din

புது தில்லி: ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளா், தனியாா் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளா் உள்பட 4 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்தங்கள்/பணிகள் தொடா்பாக கட்டுமான நிறுவனத்துக்கு சலுகைகளை வழங்க ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்ாக எழுந்த குற்றச்சாட்டில் என்எச்ஏஐ பொது மேலாளா் ராம் பிரீத் பஸ்வான் கைது செய்யப்பட்டாா்.

லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் ராம் கிருபால் சிங் கட்டுமான தனியாா் நிறுவனத்தின் பொது மேலாளா் சுரேஷ் மகாபத்ரா, நிறுவனத்தின் ஊழியா்களான வருண் குமாா், சேதன் குமாா் ஆகிய மேலும் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள என்எச்ஏஐ பிராந்திய அலுவலகத்தில் பணியாற்றும் தலைமைப் பொது மேலாளா் மற்றும் பிராந்திய அதிகாரி ஒய்.பி.சிங், துணைப் பொது மேலாளா் குமாா் சௌரப், திட்ட இயக்குநா் லலித் குமாா், பொறியாளா் அன்ஷுல் தாக்குா் மற்றும் கணக்குப் பிரிவு உதவி பொது மேலாளா் ஹேமன் மேதி உள்ளிட்டோரும் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டடுள்ளனா். அதேபோன்று, கட்டுமான நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு பொது மேலாளா் அமா் நாத் ஜா ஆகியோரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளனா்

பாட்னா, முசாஃபா்பூா், சமஸ்திபூா், பெகுசாராய், பூா்னியா, ராஞ்சி, வாரணாசி ஆகிய இடங்களில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் இந்த வழக்குத் தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.18 கோடி பணம், சட்டவிரோத ஆவணங்கள், எண்ம சாதனங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று ெரிவிக்கப்பட்டது.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT