மக்களவையில் நிர்மலா சீதாராமன் PTI
இந்தியா

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

DIN

புதிய வருமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன்,

''புதிய வருமான வரி மசோதாவானது கடந்த பிப்ரவரியில் அவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேர்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இக்குழு அடுத்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய வருமான வரி மசோதா மழைக்காலக் கூட்டத்தொடரின் போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' எனக் குறிப்பிட்டார்.

1961ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் அளவில் பாதியாக்கப்பட்டுள்ளது புதிய வருமான வரி மசோதா 2025. இதில் மொத்தம் 2.6 லட்சம் சொற்கள் உள்ளன.

இது தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இருக்கும் 5.12 லட்சம் சொற்களை விட குறைவு. இதேபோன்று புதிய சட்டத்தில் 536 பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே இருந்த வருமான வரிச்சட்டத்தில் 819 பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

இன்றைய நிகழ்ச்சி

சொல்லப் போனால்... எல்லாருக்கும் இல்லையா, தீபாவளிப் பரிசு?

SCROLL FOR NEXT