மாநிலங்களவை  (கோப்புப் படம்)
இந்தியா

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றம்.

DIN

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது.

பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதோடு மட்டுமின்றி அனைத்துப் பேரிடர்களிலும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவுவதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -ன் படி பேரிடர்களைக் கையாள்வதில் மாநில அரசுகள் சிரமங்களைச் சந்திப்பதாகவும், இதில் உள்ள சவால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை மாநில அரசுகளிடமிருந்து பெற்று இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்கேற்கும் பல்வேறு அமைப்புகளுக்கு பொறுப்புகள் பிரித்து, சீராக வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பேரிடரில் பணியாற்றுவதில் உள்ள படிநிலைகள் குறித்தும் வகை செய்யப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது, மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT