சூரிய கிரகணம 
இந்தியா

ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எங்கு, எப்போது? இந்தியாவில் தெரியுமா?

தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகணமாக நிகழ்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்த 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம், அதுவும் நாளை சனி அமாவாசையன்று நிகழ்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு வரும்போது தற்காலிகமாக சூரியன் மறைக்கப்படும் நிகழ்வே நாளை சூரிய கிரகணமாக நிகழ்கிறது.

இது ஒருசில நகரங்களில் முழுமையாகவும், ஒரு சில நாடுகளில் பகுதியாகவும் தெரிகிறது.

பொதுவாகவே சூரிய கிரகணம் என்றால் பல்வேறு நம்பிக்கைகளும், பழக்கங்களும் மக்களிடயே காணப்படுகிறது. ஆனால், நாளை நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் பார்க்க முடியாது என்று தெரிய வந்துள்ளது.

2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழவிருக்கின்றன. ஒன்று மார்ச் மாதமும், இரண்டாவது செப்டம்பர் மாதத்திலும் நிகழவிருக்கிறது. பொதுவாக சூரிய கிரகணத்தை ஒரு இயற்கையான நிகழ்வாகத்தான் அறிவியல் பார்த்தாலும், இந்தியாவில், சூரிய கிரகணத்தையொட்டி சில பழமையான மரபுகள் இருப்பதும் மக்கள் இதுநாள் வரை அதனை கடைப்பிடிப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இது பகுதி சூரியகிரகணம்தான். இரண்டாவது சூரியகிரகணம் செப்டம்பர் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தின்போது, சூரியனை நிலா மறைத்தாலும் முழுமையாக மறைக்க முடியாமல் நெருப்பு வளையம் போல சூரிய கதிர்கள் தெரிய வரும் வகையில் இருக்கும்.

நாளை நடைபெறும் சூரிய கிரகணமானது அதிகாலை 4.50 மணிக்குத் தொடங்கி உச்சத்தை அடைய காலை 6.47 மணியாகிவிடும். அதுபோல 8.43 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும். மிக அதிகாலையில் சூரியனைக் காண முடியாத நேரத்தில் இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால்தான் இந்தியாவில் இந்த கிரகணத்தைக் காண முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் நம்பிக்கையும் பழக்கங்களும்

இந்தியாவில், சூரிய கிரகணத்தின்போது பலரும் உணவு உண்ண மாட்டார்கள். கோயில்கள் அடைக்கப்படும். சூரிய கிரகணம் முடிந்ததும் வீடுகள் சுத்தப்படுத்தப்படுவதும் வழக்கம். சூரிய கிரகணத்தின்போது நல்ல சக்திகளின் ஆற்றல் குறையும் என்பதால் பலரும் காயத்ரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருப்பார்கள்.

வெறும் கண்களால் பார்க்கலாமா?

சூரிய கிரகணத்தை பொதுவாகவே வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. சூரிய ஒளி பொதுவாகவே சக்தி வாய்ந்தது. அது மறைந்து வெளிப்படும்போது வீரியம் அதிகம் இருக்கும் என்பதால் கண் பார்வையை பாதிக்கலாம் என்பதால் வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT