இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகாரம்.. 
இந்தியா

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி பற்றி...

DIN

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்துள்ள டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு, ரயில் நிலையங்கள் மற்றும் நடைமேடைகளில் பயன்படுத்தப்படும்படி உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தொழில்முறை கண்டுபிடிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாகப் பங்கேற்கலாம். இதில், சிறந்த டிஜிட்டல் கடிகாரத்தை வடிவமைப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

கூடுதலாக, மூன்று பிரிவுகளில் தலா ரூ.50,000 மதிப்புள்ள ஐந்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும், போட்டியில் பங்கேற்பவர்கள் மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதிக்குள் தங்கள் வடிவமைப்புகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், “கண்டுபிடிப்புகள் சுய தயாரிப்பாகவும், எந்தவொரு வாட்டர்மார்க் அல்லது லோகோவும் இல்லாமல், அசல் சான்றிதழுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT