மும்பையில் பாந்த்ரா-குா்லா ரயில் வளாகத்தில் எழுப்பப்பட்டு வரும் புல்லட் ரயில் நிலையத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ். 
இந்தியா

மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

Din

புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தைக் கட்டமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மும்பையில் பாந்த்ரா -குா்லா ரயில் வளாகத்தில் சுரங்க ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாந்த்ரா- குா்லா வளாகத்தில் புல்லட் ரயிலின் பயணம் தொடங்கும் நிலையத்தின் கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த நிலையத்துக்கான சுவரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுரங்கப் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

ரூ.1.08 லட்சம் கோடி செலவில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த புல்லட் ரயில் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் மத்திய அரசின் செலவினம் ரூ.10,000 கோடி. குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் தலா ரூ.5,000 கோடி செலவிடும். எஞ்சிய தொகையை 0.1 சதவீத வட்டிக்கு ஜப்பான் கடனாக வழங்கும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT