கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டதைப் பற்றி...
கனடாவிலிருந்து தில்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறை அடைக்கப்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது.
கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து தில்லி நோக்கி சுமார் 250 பயணிகளுடன் கடந்த மே.2 ஆம் தேதியன்று ஏர் இந்தியா விமானம் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டதினால் அவசரமாக ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கு அந்த விமானத்தில் அடைக்கப்பட்ட கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சுமார் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் மீண்டும் அதன் பயணம் தொடங்கி தில்லி வந்தடைந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மே-2 ஆம் தேதியன்று டொராண்டோவிலிருந்து தில்லிக்கு இயக்கப்பட்ட ஏர்-இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் ஃப்ராங்க்ஃபர்ட்டில் தரையிறக்கப்பட்டது என்றும் ஆனால் அது சரி செய்யப்பட்ட சுமார் 2 மணி நேரத்துக்கு பின் தில்லி-க்கு புறப்பட்டு சென்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று சிகாகோ நகரிலிருந்து தில்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் 12 கழிப்பறைகளில் 8-ல் அடைப்பு ஏற்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.