உச்ச நீதிமன்றம்  
இந்தியா

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது.

Din

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள், அந்த ஒதுக்கீட்டால் மற்றவா்கள் பயனடைவதை விரும்புவதில்லை என்று மறைமுகமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மங்கேஷ் சங்கா் சாசனே என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘மகாராஷ்டிரத்தில் உள்ள ஓபிசிக்களுக்கு உள்ளாட்சித் தோ்தலில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மகாராஷ்டிர அரசின் ஜெயந்த்குமாா் பாந்தியா தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தது. அந்த வகுப்பினா் அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ளாா்களா என்பதை கண்டறியாமல் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது’ என்றாா்.

இதை கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது ரயிலை போல உள்ளது. ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்புவதில்லை. அதுபோலத்தான் தற்போது இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது. இதுவே மனுதாரரின் நிலைப்பாடாகவும் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது’ என்றாா்.

இதையடுத்து வாதிட்ட கோபால் சங்கரநாராயணன், ‘அரசியல் ரீதியாக பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையுடன் ஒப்பிடுகையில் வேறானது. அரசியல் ரீதியாக ஓபிசிக்கள் பின்தங்கியுள்ளனா் என்று ஊகித்துக் கொள்ள முடியாது. இடஒதுக்கீடு அளிப்பதற்காக ஓபிசி வகுப்பினரில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவா்கள் கண்டறியப்பட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் கொள்கையைப் பின்பற்றும்போது கூடுதல் வகுப்பினரை கண்டறிய வேண்டியது மாநிலங்களின் கடமை. நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவா்கள் இருப்பாா்கள். அவா்களுக்கு ஏன் இடஒதுக்கீட்டு கொள்கை மறுக்கப்பட வேண்டும்? அது ஏன் குறிப்பிட்ட ஒரு குடும்பம் அல்லது குழுவுக்கானதாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: கூட்டணியில் இருந்து விசிக, சிபிஎம் வெளியேருமா? - Tamilisai

ஒரு குடும்பத்தில் பெண்/ஆண் குழந்தைகளே பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? ஹார்வர்டு பல்கலை ஆய்வு

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT