தில்லி விமான நிலையம்  ANI
இந்தியா

நாட்டில் 21 விமான நிலையங்கள் மே 10 வரை மூடல்!

நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பது பற்றி...

DIN

நாடு முழுவதும் 21 விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை (மே 6) நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனால், நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வடக்கு, வடமேற்கு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ஸ்ரீநகா், ஜம்மு, லே, அமிருதசரஸ், பதான்கோட், சண்டீகா், ஜோத்பூா், ஜெய்சால்மா், சிம்லா, தா்மசாலா, ஜாம்நகா், கிஷண்கா், ராஜ்கோட், பிகானீா், குவாலியா் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஏா்இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா் போன்ற விமான நிறுவனங்கள், மேற்கண்ட நகரங்களுக்கான விமான சேவையை மே 10-ஆம் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT