கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல்.

DIN

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவமும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக இந்திய - பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த மே 7 - 8 ஆம் தேதி நள்ளிரவில் இருளான பகுதியில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச எல்லையைக் கடந்து அவர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது பிஎஸ்எப் படையினர் அவரை சுட்டுக்கொன்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவரது உடல் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT