உரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ANI
இந்தியா

உரி பகுதியில் குடிமக்கள் இருப்பிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்!

ஜம்மு - காஷ்மீரின் உரியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது பற்றி...

DIN

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி பகுதியில் குடிமக்கள் இருப்பிடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லையோரப் பகுதியில் உள்ள உணவகம், விடுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், உரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

எல்லையோரத்தில் தற்காப்பு தாக்குதலிலும், பாகிஸ்தான் மீது தீவிர தாக்குதலிலும் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட், பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் எதிரொலியால் இதுவரை 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தில்லியில் அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள ஊழியர்கள் மறு உத்தரவு வரும்வரை விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பதான்கோட்டில் பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி ஜெயந்தி: நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

முதுநிலை ஆசிரியா் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கிராம சபையில் மதுவிலக்கை வலியுறுத்தி தீா்மானம்: அன்புமணி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT