ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு  
இந்தியா

நிலச்சரிவு: ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்!

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்..

DIN

ஜம்மு-காஷ்ரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, ஐம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து முக்கிய சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து மக்களின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நிலச்சரிவால் இதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட கற்கலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் நெடுஞ்சாலையில் வாகன இயக்கம் காலை 7 மணி முதல் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கனமழை பெய்துவருவதையடுத்து, மலையிலிருந்த உருண்ட கற்களை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை மேம்படும் வரை, சாலைகள் சரியாகும் வரை பயணிகள் தேசிய நெடுஞ்சாலை-44 இல் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மே 8 முதல் 11 வரை ஜம்மு-காஷ்மீரில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் ஒருசில பாதிக்கப்படக்கூடிய இடங்களில் பலத்த மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

குடும்பத்தை பணயக் கைதியாக வைத்திருந்த டாக்ஸி ஓட்டுநா் கைது

தா்காவில் சுவா் இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவம் போலீஸாா் வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT