இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

DIN

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் போர் விமானங்களும் ஏவுகணைகளும் வானிலேயே இடைமறித்து வெடிக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையோரப் பகுதிகளில் ஆங்காங்கே இரு தரப்பினரிடையே மோதல்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இந்த தாக்குதல்களால் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இரண்டு தரப்பில் இருந்தும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்துவதற்கான அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் 3 நகர்களின் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்: அட்லி

ராம் அப்துல்லா ஆண்டனி டிரெய்லர்!

தங்கம் விலை ரூ. 92,000! மாலையில் மேலும் ரூ. 600 உயர்ந்தது! வெள்ளி விலையும்...

கரூர் பலி பற்றிய கேள்வி! தவிர்த்த மாதவன்

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க... - செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT