வெளியுறவுச் செயலர் மிஸ்ரி  
இந்தியா

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமல்! -வெளியுறவுச் செயலர் மிஸ்ரி

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதைப் பற்றி...

DIN

புது தில்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பது குறித்து வெளியுறவுச் செயலர் மிஸ்ரி இன்று(மே 10) மாலை 6 மணிக்கு புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று(மே 10) மாலை திடீரென தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெளியுறவுச் செயலர் மிஸ்ரி பேசியிருப்பதாவது: “மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய ராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசினர். இன்று மாலை 3.35 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளன” என்றார்.

இரு நாட்டு ராணுவ தலைமை இயக்குநர்கள் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டமாக மே 12-ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT