முகப்பு
உலகம்

உக்ரைன் - ரஷியா போர் நிறுத்தம்: அபு தாபியில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை!

உக்ரைன் - ரஷியா இடையே போர் நிறுத்தம் குறித்து அபு தாபியில் அமைதிப்பேச்சுவார்த்தை

Updated On : 1 பிப்ரவரி 2026, 5:54 pm IST
வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி - கோப்பிலிருந்து படம் | AP Photo
பகிர்:

உக்ரைன் - ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படுவது குறித்து அபு தாபியில் அடுத்தகட்ட அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

உக்ரைன் - ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உக்ரைன்-ரஷியா போரில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவன(சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவிக்கிறது. இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டு வருகிறார். அதற்காக இருதரப்பு தலைவர்களுடனும் அவர் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகிறார்.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், மேற்கண்ட இரு நாடுகளுக்கிடையேயான சண்டை நிறுத்த உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உக்ரைன் - ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்படுவது குறித்து அபு தாபியில் வரும் புதன்கிழமை(பிப். 4) தொடங்கி இரண்டு நாள்கள் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) தெரிவித்தார். அதில், உக்ரைன் மற்றும் ரஷிய பிரதிநிதிகளுடன் அமெரிக்க பிரதிநிதிகளும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The next round of peace talks between Russian and Ukrainian delegations will take place on Wednesday and Thursday, Ukrainian President Volodymyr Zelenskyy announced on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.