இந்தியா

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேலாளர்கள் போன்றோருக்கு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நாட்டின் மேற்குப் பகுதியில் நடந்துவரும் போர்ப் பதற்றம் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முக்கிய பணியில் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது விடுப்பில் உள்ள அனைத்து வருவாய் கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களும் தலைமையகத்திற்குத் திரும்பி உடனடியாக பணியில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் எந்த அதிகாரிக்கும் இனி விடுமுறை வழங்கப்படாது என்றும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை

பூடான் புறப்பட்டார் மோடி!

அவிநாசி: கள்ளக்காதல் விவகாரம்.. மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது!

அரியலூர் அருகே சிலிண்டர் லாரி விபத்து! வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்!

இரண்டாம் நாள்! பொங்கல் ரயில் முன்பதிவுகள் நிரம்பின!

SCROLL FOR NEXT