பாகிஸ்தான் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றத்துக்கு இன்று மாலை 5 மணி முதல் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு தவறான தகவல்களைப் பரப்புரை செய்துள்ளனர். ஜம்மு, பதான்கோட், பூஜ் பகுதிகளில் விமான நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன என்பது பொய்யான தகவல்.
பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடார்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டன. அதேபோன்று சண்டீகர், வியாஸில் வெடிமருந்து கிடங்கு சேதப்படுத்தப்பட்டன என்று பாகிஸ்தான் தரப்பில் கூறியதும் முற்றிலும் தவறான தகவலாகும்.
இந்திய ராணுவம் பாகிஸ்தானில் மசூதிகளைச் சேதப்படுத்தியாக பாகிஸ்தான் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. இந்தியா மதச்சார்பற்ற தேசம், நமது ராணுவம் அரசமைப்பின் மிக அழகான பிரதிபலிப்பு” என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.