பிரதமர் தலைமையில் விரிவான ஆலோசனை  ANI
இந்தியா

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

புது தில்லியில் பிரதமர் தலைமையில் விரிவான ஆலோசனை!

DIN

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முக்கியமாக, பாகிஸ்தானுடனான உறவுகள் குறித்தும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 3 நாள்களாக வான் வழி தாக்குதல்கள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தி வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா ராணுவ ரீதியாக தக்க பதிலடி கொடுத்தது. இந்தநிலையில், இரு நாடுகளும் அமைதிப் பாதைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.

இதனால் போர் நிறுத்தம் செய்து கொள்ளலாமென இன்று மாலை அதிரடியாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் சம்மதித்துள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT