இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!

ஜம்மு - காஷ்மீரில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது குறித்து...

DIN

போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.

ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

கடந்த சில நாள்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடந்திருந்த நிலையில், இரவில் ட்ரோன் அல்லது துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்னூர், பிரோஸ்பூர், ரஜோரி, பூஞ்ச், ஜம்மு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே அதை மீறி ஜம்மு-காஷ்மீர் மற்றும் குஜராத்தின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT