இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியாற்றி வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
அகர்தலாவில் உள்ள மத்திய வேளாண்துறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வி. நாராயணன், நாம் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, நமது நாட்டின் செயற்கைக்கோள்களையும் அதில் ஈடுபடுத்தியிருக்கிறோம்.
தற்போது, நமது நாட்டின் 7,000 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கடல் எல்லையை செயற்கைக்கோள் வழியாகவே கண்காணித்து வருகிறோம். நமது செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாவிட்டால், பல்வேறு சாதனைகளை நாம் படைத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இஸ்ரோ, தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடையது உள்பட 127 இந்திய செயற்கைக்கோள்களை ஏவியிருக்கிறது. இந்தியாவுக்கு என 12க்கும் மேற்பட்ட உளவு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் இயங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.